தமிழர் பகுதியில் கோர விபத்து..! சம்பவ இடத்தில் இருவர் பலி

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் சொகுசு வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன காவல் துறையினர் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று(6) காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற சொகுசு வாகனம் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து கலவையை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சொகுசு வாகனத்தில் பயணித்த கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 47 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர். கனரக Read More

Read more

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த விலை குறைப்பு இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பாணின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் பாணின் விலை 200 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Read more

உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைக்கு துணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் ஏகமனதாக இந்த தெரிவினை மேற்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் இந்தப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு செப்டம்பர் வரையில் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சார்பில் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிவியா, கொங்கோ, எஸ்டோனியா, காம்பியா, ஐஸ்லாந்து, ஈரான், மலேசியா, Read More

Read more

உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இந்த வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கை ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி நேற்று(02.06.2023) வரை வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி Read More

Read more

சடுதியாக குறைவடையவுள்ள எரிவாயு விலை….. வெளியாகிய அறிவிப்பு!!

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் நடைமுறைப்படுத்தபடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது. மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

கட்டாயம் பதிவு செய்யவேண்டியவர்கள்….. வெளியானது வர்த்தமானி!!

இன்று (01) முதல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பின்படி,   இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இலங்கையின் Read More

Read more

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்….. இன்றைய வானிலை அறிவிப்பு!!

நாடு முழுவதும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் Read More

Read more

இலங்கையில் மத பதற்றம் வெடிக்கும் சாத்தியம்….. எச்சரிக்கை தகவல்!!

இலங்கையில் சிலர் பதற்றத்தை தூண்டும் வகையில் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அண்மை நாட்களில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பின்னணியிலேயே, இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருஸாந்த இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், “இலங்கையில் அண்மை நாட்களில் மதங்களுக்கும் அதன் படிப்பினைகளுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த Read More

Read more

ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அங்கிதா என்ற தாய். இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறப்பது 6.5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் அந்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த அங்கிதா என்ற பெண் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More

Read more

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக கூறி 81 இலட்சம் ரூபா மோசடி….. பெண்ணொருவர் கைது!!

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர் இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆகிக நாடுகளில் தாதியர் சேவை மற்றும் விடுதி துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரை ஏமாற்றியமை விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளது. ஹலவத்தை நீதிமன்றில் செய்த முறைப்பாட்டின் Read More

Read more