உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read more

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் வெளியீடு!!

இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23 முதல் ஜூன் 01 வரையிலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரையிலும் நடைபெறவுள்ளது.

Read more

இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு!!

கடந்த இரு ஆண்டுகளாக நிலவிய கொவிட் அச்சுறுத்தலால் தேசிய பரீட்சைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக சகல பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.   அதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளன.   இந்நிலையில், மூன்று மாதங்கள் என்ற குறுகிய கால இடைவெளியில் மீண்டும் ஆகஸ்டில் உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சைகள் Read More

Read more

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்….. ஆட்பதிவு திணைக்களம்!!

இலங்கையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதமொன்று வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய அடையாள அட்டைக்குப் பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த Read More

Read more

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட பரீடசைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்த முடியும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் சிறிலால் நொனிஸ் (Srila Nonis) தெரிவித்துள்ளார்.   பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளதுடன், 11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் Read More

Read more

சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் நிலை….. பரீட்சைகள் திணைக்களம்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையை நடாத்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடதாசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன (L.M.D.Dharmasena) தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த சாதாரணதரப் பரீட்சையை கொரோனாத் தொற்று காரணமாக மே Read More

Read more

அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மகனும், ஆசிரியரும் கையும் களவுமாக சிக்கினர்!!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின்  கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,   தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் Read More

Read more

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிடட முக்கிய தகவல்!!

2021இற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கால கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்ப தரத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பரீட்சை சூழலை பேண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய, பாடசாலைகளின் Read More

Read more

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க கூறி மனு தாக்கல்….. முழுமையான விவரங்கள் வருமாறு!!

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி பொதுநல ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்குவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு தொடர்பில் கருத்து தெரிவித்த கொடித்துவக்கு, பரீட்சையை Read More

Read more

க.பொ.த சாதாரண தர விண்ணப்பதாரிகள், பரீட்சை சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு MOE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன ( L.M.D. Dharmasena) தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கடந்த ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியாக இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) Read More

Read more