தொடரும் சீரற்ற காலநிலை….. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளன முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (22/05/2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது Read More

Read more

34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read more

இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பொது இராஜதந்திர துணைச் செயலாளர்!!

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அவர் விஜயம் செய்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது. நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது. இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை Read More

Read more

டீசல் விலை அதிகரிப்பு – பேருந்து கடடனங்களில் எதிரொலி….. முழுமையான விபரங்கள்!!

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நேற்று(01/02/2024) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்துக் கட்டணத்தில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் இதுவரையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய மற்றும் முன்னைய எரிபொருள் Read More

Read more

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி காலமானார்!!

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன்(25/01/2024) காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் தற்போது அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47. கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில், சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று(25/01/2023) மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் Read More

Read more

வங்கி கணக்குகள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் பண மோசடிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக வங்கிக் கடனட்டைகளிலிருந்து பணத்தை மோசடி செய்கின்றனர். இந்நிலையில், இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பணத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய வழி முறைகளை மக்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி எந்தவொரு தனிநபருடனும் உங்களது தனிப்பட்ட தகவல்களை இணையவழி ஊடாக பகிர்ந்துகொள்ள வேண்டாம். மோசடி செய்யும் நபர் Read More

Read more

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி!!

நாட்டில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று (01/01/2024) முதல் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை Read More

Read more

சிகரெட்டின் விலையும் அதிகரிப்பு!!

நாட்டில் இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நாட்டில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை நடைமுறைக்கு வருவதனாலேயே சிகரெட்டின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, Read More

Read more

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரசாங்கம் பெறுமதிசேர் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக வெதுப்பக தொழிற்துறையினரும், வெதுப்பக உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் Read More

Read more

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்!!

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read more