உயர்தர பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.

இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் பகுதி

கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானதுடன்

எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பா் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந் குமார் தெரிவித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *