#Sri lnaka

EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு….. இலங்கையில் 9, பாகிஸ்தானில் 4 போட்டிகள்!!

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் A பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையின்படி இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின், லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஒரே நேரத்தில் 40+ உயிர்கள் பலி!!

மட்டக்களப்பு – வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் உயிரிழந்துள்ளன. மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில் மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகளே இவ்வாறு நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தன. இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் அன்றாடம் தொழிலுக்காக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி!!

இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தனது 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இச்சம்பவமானது நேற்றையதினம்(11/06/2022) இடம்பெற்றுள்ளது.   குறித்த சந்தேகநபரொருவரால் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தன்னை கொல்ல முயன்றபோது வீட்டில் இருந்த 13 வயது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.   சந்தேக நபர் பின்னர் வீட்டிற்குள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார் ‘ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ’!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பில் இன்று(09/06/2022) இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்று(08/06/2022) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

14 வயது சிறுமி ஒருவர் மாயம்!!

தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கலஹா காவல் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாடு முழுவதும்  ஆயுதம் தாங்கிய படையினர்….. கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டது விசேட கட்டளை!!

இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்சவினால் விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காகவே இந்தக் கட்ளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும்  ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 40ஆவது அதிகார சபையான  பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ரஷ்யாவின் “ஏரோஃப்ளோட்” விமான பிரச்சினை….. இலங்கை மீது கடும் அதிருப்தியில் ரஷ்யா – மன்னிப்பு கோரும் அரசியல் பிரபலங்கள்!!

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (07/06/2022) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார். அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று காலை தென்னிலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு(படங்கள்)!!

எல்பிட்டிய பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சில பொருட்களின் இறக்குமதிகான “விசேட பண்டவரி”யானது ‘200%’ ஆக அதிகரிப்பு!!

இறக்குமதி  செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டவரியை நிதி அமைச்சு 100% வீதமாக நேற்று(01/06/2022) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது, 1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வதிரியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு….. வயோதிபப் பெண் தாக்கப்பட்டு கொலை!!

யாழில் வயோதிபப் பெண் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் நெல்லியடி வதிரி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் போதே தாக்குதலுக்கு இலக்காகி 76 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது  தலையில் தாக்கப்பட்ட நிலையில் நேற்று முற்பகல் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வழங்கப்பட்ட Read More

Read More