உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன்,

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார்.

2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும்,

இந்த வருடத்திற்கான பாடத்திட்டத்தை உள்ளடக்கி,

பிள்ளைகளுக்கு அதிகபட்ச பாடசாலை நாட்களை வழங்குவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை,

நேற்று நிறைவடைந்த கல்விபொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூலை மதம் 10 திகதிக்கு நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *