சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read more

சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்தி வைப்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரீட்சைகள் முன்னர் திட்டமிட்டபடி 23ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்படவுள்ளது என நேற்று செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவ்வாறான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதம்….. ஆட்பதிவு திணைக்களம்!!

இலங்கையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக கடிதமொன்று வழங்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய கடிதமொன்று விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க (Viyani Gunathilaka) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய அடையாள அட்டைக்குப் பயன்படுத்தப்படும் அட்டையை சிக்கனப்படுத்தும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் குறித்த Read More

Read more

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட பரீடசைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

கடதாசி தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்த முடியும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் சிறிலால் நொனிஸ் (Srila Nonis) தெரிவித்துள்ளார்.   பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளதுடன், 11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் Read More

Read more

க.பொ.த சாதாரண தர விண்ணப்பதாரிகள், பரீட்சை சான்றிதழ் பெற காத்திருப்போருக்கு MOE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன ( L.M.D. Dharmasena) தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கடந்த ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியாக இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) Read More

Read more

வெளியானது O/L, A/L, Scholarship பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணை!!

ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைகள் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால்( Dinesh Gunawardena ) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆறு மாதங்களின் பின்னர் தரம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 08 Read More

Read more

க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது….. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!!

க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (ஒக் .7) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா (Sajid Premadasa) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்தார். க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடங்களை முடிப்பதற்கு தேவையான நேரம் வழங்கப்படும் என்றும் பரீட்சை திகதி குறித்து ஒரு உறுதியான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் Read More

Read more