சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில்….. பல அமைச்சர்களால் பதவி விலகல் கடிதங்கள் ஜனதிபதிக்கு அனுப்பிவைப்பு!!

சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் பல அமைச்சர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (11/07/2022) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். இதேவேளை, சர்வகட்சி ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(11/07/2022) காலை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார் Read More

Read more

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார் ‘ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ’!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பில் இன்று(09/06/2022) இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்று(08/06/2022) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த Read More

Read more

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்….. கல்வி அமைச்சர்!!

ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர்தர பரீட்சை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். 2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்னர் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதி வரை இந்த வருடம் பாடசாலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், இந்த வருடத்திற்கான Read More

Read more

அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது….. பிரதமர் ரணில் விக்ரமசிங்க!!

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் அலுவலக செலவுகளை குறைக்க முடிவு Read More

Read more

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்று சிகிச்சை அளிக்க மறுத்தது பிரபல தனியார் வைத்தியசாலை….. உறுதிப்படுத்தினார் குறித்த வைத்தியசாலையின் மருத்துவர்!!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு நேற்றைதினம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை மருத்துவர் பேராசிரியர் ரணில் ஜயவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு காரணமான அமைச்சர்கள் பங்குபற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாக அமைச்சர் ரணதுங்கவை கலாநிதி ஜெயவர்த்தன பார்வையிட மறுத்ததாக சமூக ஊடகங்கள் தெரிவித்தன. ஊடக நிறுவனமொன்றுக்கு தொலைபேசி ஊடாகப் பேசிய பேராசிரியர் ஜெயவர்தன இந்த ஊடகச் செய்திகளை உறுதிப்படுத்தியதுடன் எந்தவொரு நோயாளியையும் பார்க்கவோ அல்லது Read More

Read more

4,000 mt டீசல் மற்றும் 2,500 mt 92 ரக பெட்ரோல் விநியோகம் மட்டுமே நாளொன்றுக்கு…… எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர!!

தினமும் 4 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 2 ஆயிரத்து 500 மெற்றி தொன் 92 ரக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்திகள் மீள ஆரம்பிக்கப்படும் வரை வரையறுக்கப்பட்ட வகையில் இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ‘எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர’ Read More

Read more

கோட்டாபயவை பதவி விலகவைக்க பல கட்சிகளின் தலைவர்கள் கூட்டு தீர்மானம்!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் அரச தலைவர் பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை சபாநாயகர் முற்றாக மறுத்துள்ளார்.   கோட்டாபய Read More

Read more

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, எதிர்காலத்தில் நான்காம்கட்ட தடுப்பூசி….. புதிய சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் காலத்தில் கொவிட் – 19 நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.   நேற்று புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.   இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.   எனினும், பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் Read More

Read more

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் இன்று காலை பதவியேற்றது!!

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன் போது புதிய அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில், இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.   அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி Read More

Read more

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read more