அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் அரசிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று(26/05/2022) முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அத்துடன், அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

Read more

சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் முக்கிய நிபந்தனை!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் மகிந்த ஜயசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் குறைந்தளவான கொடுப்பனவை ஏற்றுக்கொள்ள முடியாது. எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வழங்குவதற்கு தீர்மானித்துள்ள கொடுப்பனவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். அதேநேரம், Read More

Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

இதுவரையில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சன்ன Read More

Read more

தனது சம்பளத்தை இரண்டு மடங்காக்கிய நயன்தாரா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. Read More

Read more

புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது!!

நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால் புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் நேற்றைய தினம் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் இம்மாதத்திற்கான சம்பளம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மேலும் தெரிவிக்கையில், தமிழ், Read More

Read more

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்படும்…..சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம்!!

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேதனம் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை தமது சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. எனினும், அதற்கான தீர்வு இதுவரையில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலை தொடருமாயின் தாம் பணிப்புறக்கணிப்புக்கு செல்ல நேரிடும் என அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டபிள்யு.எம் ஜோதிரட்ன குறிப்பிட்டுள்ளார். Read More

Read more

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்று பேச்சுவார்த்தை….. ஜோசப் ஸ்டாலின்!!

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களை இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் () தெரிவித்துள்ளார். அத்துடன், பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதன்போது, தங்களது வேதன பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட Read More

Read more

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும்…. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்!!

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் Read More

Read more

பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை CID இற்கு வழங்கவும்!!

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்கக்கோரி நடத்தப்பட்ட பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அந்த போராட்டங்களை ஒழுங்கு செய்தவர்களின் விபரங்களை சிஐடிக்கு வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிஐடி அறிவுறுத்தியுள்ளது. 25,07, 2021 மற்றும் 05,08, 2021 முன் நடந்த போராட்டங்கள் பற்றிய தகவல்களை செப்ரெம்பர் 25 க்கு முன் அளிக்குமாறு சிஐடி செப்ரெம்பர் 06 ஆம் திகதி அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, ஆசிரியர்-தலைமை பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் இடங்கள் Read More

Read more

கொடிய நோயை எதிர்கொள்ளும் ஒரு முன் வரிசை குழு ஊழியர்களின் ஊதிய விவகாரம்!!

கடமையாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை தொடர்ந்து அவர்களது குடும்பத்திற்கு வழங்குமாறு நாட்டின் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவை சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் 6,000 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு முன் வரிசை குழுவாக, சுகாதார ஊழியர்கள் Read More

Read more