பிரபல மகளீர் மகாவித்தியாலய மாணவிகளை இலக்குவைத்து தாக்க வந்த குண்டுதாரிகள்!!

வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றைய தினம்(25/05/2023) சென்ற இருவர் தம்மை காவல்துறையினர் என அடையாளப்படுத்தியதுடன் பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன் இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர். குறித்த தகவலை கடமையில் இருந்த Read More

Read more

யாழில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது….. அரச பாடசாலை ஒன்று!!

யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இருப்பினும், இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை….. கல்வி அமைச்சு!!

அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கப்பல் வருவது மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணமாக கூறப்படுகின்றது.   எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா Read More

Read more

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ‘அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும்’….. கல்வி அமைச்சு!!

கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலைகளுக்கு இணைய வழி கல்விக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது .

Read more

பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பம்….. ஆனால் மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை!!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு Read More

Read more

சாதாரண தரப் பரீடசை எழுதும் “மாணவி” ‘பரீட்சை கண்காணிப்பாளர்’ ஒருவரால் பலாத்காரம்!!

நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் ‘நச்சதுவ’வில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புதன்கிழமை (25/0/202) பரீட்சை நிலையத்தில் வைத்து குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திகதியில் நடைபெற்ற வரலாறு பரீட்சை தொடர்பான கேள்விக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை Read More

Read more

கொழும்பில் பதற்றம்….. மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!!

கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, பெருந்திரளான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களில் சிலர் கோட்டா கோ கமவில் உள்ள நூலகத்திற்கு சில புத்தகங்களை கையளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனுமதி அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களை  WWW.DOENETS.LK  ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிரவரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்!!

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கையின் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சிறுவர்களுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் . தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் தரம் 01 மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 02 வருடங்களாக வெளியில் வராத சிறுவர்கள் தற்போது சுற்றுச்சூழலுக்குள் வந்துள்ளனர். இந்நிலையில், சிறிய சளி சிறுவர்களிடையே Read More

Read more

பாடசாலை நேரம் ஒருமணத்தியாலத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்!!

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது

Read more