இந்தியா நோக்கி விரையும் ஸ்ரீலங்கா கடற்படை கப்பல்!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பிராணவாயுவை கொண்டு செல்வதற்காக ஸ்ரீலங்கா கடற்படை கப்பலான “சக்தி” இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்தியாவிடமிருந்து வாராந்தம் 100 மெட்ரிக் தொன் பிராணவாயுவை கொள்வனவு செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வாரம் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதுடன், தேவை பூர்த்தியாகும் Read More

Read more

கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற வடக்கு மாகாணத்தவர்கள் கைது!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் Read More

Read more

தீப்பற்றிய X-Press Pearl கப்பல்; கடற்பரப்பில் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் ஆரம்பம்!!

 X-Press Pearl கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலினூடாக ஆழ்கடல் பகுதியை Scan செய்து, எஞ்சிய பாகங்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். இந்த தேடுதல் நடவடிக்கை நாளை (02) நிறைவுசெய்யப்படும் எனவும் அவர் கூறினார். இதன்பின்னர் ஆழ்கடல் பகுதியில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை அகற்றுமாறு கப்பல் நிறுவனம் Read More

Read more

இலங்கை கடல் எல்லையைக் கடந்தது MSC Messina!!

தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது. இன்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கப்பல் சிங்கப்பூர் நோக்கி டக் படகின் மூலம் இழுத்துச் செல்லப்படுவதாக கடற்படை தெரிவித்தது. கப்பலில் பரவிய தீ, கப்பல் ஊழியர்களால் நேற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. தென் கடற்பரப்பின் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் Read More

Read more

மற்றுமொரு கப்பலில் தீ – ராசியில்லாத ஸ்ரீலங்கா கடல்பரப்பு! !

ஸ்ரீலங்காவுக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீ பிடித்த கப்பலின் கப்டன் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் இன்று திங்கட்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எக்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு Read More

Read more

MV X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை காரணம் !! கப்பல் தரை தட்டியது – டைட்டானிக் கப்பலை போல மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது. கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு நேற்றுமுற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கப்பலின் பின்பகுதி நேற்று மாலை 3 மணியளவில்  தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார். எனினும், கப்பலின் முன்பகுதி Read More

Read more

கொழும்பில் பற்றியெரிந்த கப்பல் திட்டமிட்ட சதி – பேராசிரியரின் கருத்தால் பரபரப்பு!!!!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே பற்றியெரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயானது திட்டமிட்ட சதியென்று பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் சந்திமா விஜயகுணவர்தன இதனை நேற்று சமுக வலைத்தளமொன்றில் இயங்கிவரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்த நிலையிலேயே இந்த பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கப்பலில் இயற்கையாகவே தீ விபத்து ஏற்படவில்லை. வெடிக்க செய்திருக்கின்றனர். அப்படியென்றால் அதுவும் ஒரு தாக்குதலாகவே கணிக்கப்பட வேண்டும். இது திட்டமிட்ட சதி என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தீவிரவாத தாக்குதலுக்கு Read More

Read more

காலி கடற்பரப்பில் பெருமளவான ஆயுதங்கள்!!!!

காலி கடற்பரப்பில் பெருமளவு ஆயுதங்கள் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதிக்கு செல்லவிருந்த கப்பலில் ஆயுதங்களை இலங்கை கடற்படையினர் ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கடற்படையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. படகொன்றிலிருந்து கப்பலிற்குள் ஆயுதங்களை ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆயுதங்களை ஏற்ற பயன்படுத்தப்பட்ட வலை அறுந்துவிழுந்தது என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read More

Read more

கொழும்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!!

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. குறித்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறைந்த அடர்த்தி கொண்ட பொலி எதிலினின் (எல்.டி.பி.இ) லோட்ரீன் பிராண்டின் சாக்குகளும் கடற்கரையில் சிதறிக் கிடக்கின்றன. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் இந்த இரசாயனங்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன.

Read more