13,200 லீற்றர் எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி தடம்புரண்டது!!

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விபத்து ஏற்படும் போது தாங்கியில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் குருநாகல் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினரின் பெரும் Read More

Read more

சுன்னாகத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி, சாரதி மற்றும் உதவியாளர் மீதும் கொடூர தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more

டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள 26,000mt பெற்றோலை தாங்கிய கப்பல்!!

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல் டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த கப்பலில் 26,000 தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 9,000 தொன் 95 ஒக்டேன் உலோக எரிபொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை இறக்க 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் Read More

Read more