அடுத்த சில வாரங்களில் ஏழு எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன….. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!

ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், “40 ஆயிரம் மொற்றி தொன் டீசல் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் வரும். கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் 10 ஆம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் வரும். மற்றுமொரு டீசல் கப்பல் 19 ஆம் திகதி வருகிறது. 13 ஆம் Read More

Read more

655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை “எரிபொருள் விநியோகம் நடைபெறாது”!!

இலங்கைக்கு இதுவரை எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை எரிபொருள் விநியோகம் நடைபெறாது என அந்த விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தில் 300 மில்லியன் டொலர்களை போட்ரோ சைனா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. இதனைத்தவிர,   மேலும், ஆறு விநியோகஸ்தர்களுக்கு 355 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. கடனை செலுத்தும் Read More

Read more

இன்று அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்….. மீண்டும் எரிபொருட்களின் விலைகள் உயர்வு!!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (26/06/2022) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும். இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை Read More

Read more

விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம்!!

விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. எனினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

13,200 லீற்றர் எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி தடம்புரண்டது!!

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விபத்து ஏற்படும் போது தாங்கியில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் குருநாகல் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினரின் பெரும் Read More

Read more

ஆறு வாரங்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்….. வலுசக்தி அமைச்சர்!!

95 ஒக்டென் பெட்ரோல் நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள 95 ஒக்டென் பெட்ரோல் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெட்ரோல் கையிருப்பில் இருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 ஒக்டென் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் Read More

Read more

எரிபொருள் விநியோக இடைநிறுத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பிலான அறிவிப்பொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எரிசக்தி அமைச்சில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொள்கை ரீதியில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் தாங்கிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன Read More

Read more

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும்….. Lanka IOC தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்!!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘ஆனந்த பாலித’ தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை Read More

Read more

40,000 mt டீசலுடன் இன்று நாட்டை வந்தடையவுள்ளது கப்பலொன்று!!

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவியின் கீழ் இந்த எரிபொருள் இலங்கைக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read more

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மூன்று அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை 111.37 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் சுத்திகரிப்பிற்காக பயன்படும் மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

Read more