பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மக்களுக்கு ‘லிட்ரோ நிறுவனம்’ விடுத்துள்ள அறிவிப்பு!!
நாடளாவிய ரீதியில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இன்று முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். Read More
Read more