#Gas Import

FEATUREDLatestNewsTOP STORIES

இன்று இலங்கையை வந்தடையவுள்ளது எரிவாயு கப்பல்!!

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று(17/05/2022) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஓமானிலிருந்து இந்த எரிவாயு தொகை நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

Read More
LatestNewsTOP STORIES

தாய்லாந்திலிருந்து 10 வீத கட்டண கழிவில் எரிவாயு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி….. ஆனாலும் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்கிறார் லிட்ரோ நிறுவன தலைவர்!!

தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்கு எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம்(Siam) எரிவாயு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொறியியலாளர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். விநியோகக் கட்டணத்தில் 10 வீத குறைந்த கட்டணத்துடன் எரிவாயுவை வழங்கவும் குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

இன்று முதல் சந்தைக்கு வருகிறது எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள்!!

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட கொள்கலன்கள் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா (Jayantha d Silva) தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும், பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட, சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க, எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு Read More

Read More
LatestNews

எரிவாயு Cylinder வெடிப்பின் எதிரொலி….. அதிரடி நடவடிக்கை!!

இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Read More