சரக்கு வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி….. சாதாரண மோட்டார் வாகன இறக்குமதிக்கான இறக்குமதிக்கு முட்டுகட்டை!!

இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் அண்மையில் பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், சாதாரண மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் இன்னமும் வழங்கவில்லை. இந்த நிலையினால், நாட்டில் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, உள்நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலைகள் Read More

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் சாதகமான பதில்!!

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன் மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் Read More

Read more

முச்சக்கர வண்டிகளில் கட்டணம் செலுத்தி அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதி!!

முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலங்காரங்களை நிறுவுதல் 30 வகைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலதிக தகவல்களை இணையத்தளத்திலோ அல்லது முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டுக் கிளையிலோ 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை….. வெளியாகிய அதிரடி அறிவிப்பு!!

தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுமார் 900 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் கொள்வனவுக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட பின்னரும் அது Read More

Read more

மிக விரைவில் மீண்டும் இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்கள்….. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள்!!

மிக விரைவில் மீண்டும் இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களின் இறக்குமதி தொடங்கப்படலாமென ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளால் இந்த நாட்டிலுள்ள வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் இது தொடர்பாக ஏற்கனவே சாதகமான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கத்தினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், Read More

Read more

சில பொருட்களின் இறக்குமதிகான “விசேட பண்டவரி”யானது ‘200%’ ஆக அதிகரிப்பு!!

இறக்குமதி  செய்யப்படும் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டவரியை நிதி அமைச்சு 100% வீதமாக நேற்று(01/06/2022) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது, 1000 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும்….. Lanka IOC தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்!!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘ஆனந்த பாலித’ தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை Read More

Read more

இன்று இலங்கையை வந்தடையவுள்ளது எரிவாயு கப்பல்!!

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று(17/05/2022) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஓமானிலிருந்து இந்த எரிவாயு தொகை நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

Read more

ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கு அனைத்து சிறப்பு அங்காடிகளிலும்!!

சதொசவிற்கு மாத்திரம் விநியோகிக்கப்பட்ட இறக்குமதி அரிசி தொகை நிறைவடையும் வரை அவற்றை சிறப்பு அங்காடிகளுக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன், நுகர்வோர் ஒருவருக்கு ஆகக்குறைந்தது ஐந்து கிலோ கிராம் அரிசி விநியோகிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

37,000 mt யூரியாவை இறக்குமதிசெய்ய தனியார் துறைக்கு அனுமதி!!

எதிர்வரும் போகங்களுக்கு தேவையான 37,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தொகையில் 7,000 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டார். 12,000 மெட்ரிக் தொன் யூரியாவை எதிர்வரும் நாட்களுக்குள் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இறக்குமதி செய்யப்படும் உரம், தனியார் துறையின் தலையீட்டுடனேயே நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20,000 மெட்ரிக் Read More

Read more