#Singapore

FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமெரிக்கா, மலேசியா, பிரித்தானியா மற்றும்சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்….. கோட்டாவை சிங்கப்பூருக்குள் அனுமதித்ததற்கு எதிராக போராட்டங்கள்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமைக்கு எதிராக இன்று(19/07/2022) மலேசியா பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமை குறித்து தனது நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகள் உருவாகியுள்ளமை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில், நாடுகடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் கோலாம்பூர் ,லண்டன் மற்றும் நியுயோர்க் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவை தனது உறுப்பு நாடுகளுக்கு முன்னர் விடுத்திருந்த அறிக்கைக்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கட்டுநாயக்கவில் அவசரமாக தரைங்கியதால் ‘வானில் நேருக்குநேர் மோதாமல் தப்பிய வெளிநாட்டு விமானங்கள்!!

லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், ஹீத்ரோவில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் அங்கராவின் துருக்கி வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.   அங்கரா விமானக் கட்டுப்பாடு UL 504 Read More

Read More
LatestNewsTOP STORIES

டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள 26,000mt பெற்றோலை தாங்கிய கப்பல்!!

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல் டொலர்களை செலுத்தாத காரணத்தினால் 15 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த குறித்த கப்பலில் 26,000 தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 9,000 தொன் 95 ஒக்டேன் உலோக எரிபொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை இறக்க 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் Read More

Read More
LatestNewsWorld

தடுப்பூசி முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் சிங்கப்பூரிக்குள் செல்லலாம்!!

கொரோனாவுக்கான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தமது நாட்டு்குள் பிரவேசிக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அடுத்த மாதம் மேலும் ஆறு நாடுகளுக்கு இதனை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்படி டிசம்பர் 14 முதல், தாய்லாந்தில் இருந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாது சிங்கப்பூருக்குள் நுழையலாம். கம்போடியா, பிஜி, மாலைதீவு, Read More

Read More
LatestNews

சிங்கப்பூர் நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டது, இலங்கைக்கு  டீசல் இறக்குமதிக்கான நீண்டகால அனுமதி!!

இலங்கைக்கான  டீசல் இறக்குமதிக்கான நீண்டகால அனுமதி சிங்கப்பூர் நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டள்ளது. 2022.01.01 தொடக்கம், 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5% பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் Read More

Read More
LatestNews

ஒரு அப்பிள் பழத்தின் எடையைக் கொண்ட உலகின் மிகச்சிறிய குழந்தை!!

உலகில் பிறந்த மிகச் சிறிய குழந்தை என நம்பப்படும் குழந்தை சிங்கப்பூர் மருத்துவ மனை ஒன்றில் 13 மாத அவசர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. க்வெக் யு சுவான் என்ற அந்தப் பெண் குழந்தை பிறக்கும்போது ஒரு அப்பிள் பழத்தின் அளவான 212 கிராம் எடை உடையதாக இருந்தது. அந்தக் குழந்தையின் உயரம் 24 சென்டிமீற்றர் மாத்திரமாக இருந்தது. 25 வாரத்திற்கு குறைவான காலத்திலேயே அந்த குழந்தை பிரசவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த சாதனை அமெரிக்க Read More

Read More
LatestNewsWorld

சீனாவின் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்த சிங்கப்பூர்!!

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை சிங்கப்பூரில் செலுத்திக் கொள்வோரை தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கணக்கிடவில்லை என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வோர் மட்டுமே சிங்கப்பூரின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தியவர்களாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. சினோவாக் தடுப்பூசி குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாததால் அந்தத் தடுப்பூசியை தேசிய திட்டத்தில் சேர்க்கவில்லை என சிக்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 37 லட்சம் மக்கள் பைஸர் அல்லது Read More

Read More
LatestNewsWorld

மற்றுமொரு கப்பலில் தீ – ராசியில்லாத ஸ்ரீலங்கா கடல்பரப்பு! !

ஸ்ரீலங்காவுக்கு அருகில் கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More