இன்று காலை பரீட்சார்த்தமாக பயணித்தது யாழ்தேவி….. வார இறுதியிலிருந்து சேவையில்!!

யாழ்தேவி புகையிரதம் அனுராதபுரம் புகையிரதம் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09/07/2023) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இதன்போது, அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் வவுனியா – ஓமந்தை வரையான Read More

Read more

100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது….. சென்னை – யாழிற்கிடையிலான முதல் கப்பல்!!

சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16/06/2023) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது. சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறீபாலடி சில்வா வரவேற்றார். சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாக நேற்றிரவு(15/06/2023) சென்னையில் இருந்து புறப்பட்ட கப்பல் இன்று(16/06/2023) காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது, 25 கோடி ரூபா பெறுமதியில் அமைக்கப்பெற்ற காங்கேசன்துறை துறைமுக முனையத்தையும் அமைச்சர் நிமல் சிறீபாலடி Read More

Read more

காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவை….. ஏப்ரல் 29 ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக இலங்கை கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரியிலுள்ள காரைக்கால் வரையான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் Read More

Read more

புதுப்பொலிவுடன் காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையை தொடங்கியது “யாழ் ராணி”!!

காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து இன்று(28/07/2022) முதல் புதியதொடருந்து பெட்டிகளுடன் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. யாழ் ராணி தொடருந்தானது ஆரம்பம் முதல் இன்று வரை பழைய பெட்டிகளுடனே தனது சேவையை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில், இந்தியாவின் உதவியுடன் யாழ் ராணி தொடருந்து புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை இன்று(28/07/2022) முதல் ஆரம்பித்துள்ளது. இதேவேளை, யாழ் ராணி தொடருந்தானது காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 6.00 க்கு தனது பயணத்தை தொடங்கி முறிகண்டி வருகை தந்த Read More

Read more

வரலாற்றில் முதல் தடவை உச்சம் தொட்ட பேருந்து கட்டணம்!!

முதல் தடவையாக இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணம் 4450.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. குறித்த கட்டண உயர்விற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான கட்டண அதிகரிப்பு இடம் பெறவில்லை எனவும், இதன் காரணமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை Read More

Read more

கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை ஆரம்பம்!!

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை, 8 பெட்டிகளுடன் இன்று (09) பயணத்தை ஆரம்பித்தது. இன்று (09) அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில், நண்பகல் 12.15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தது. மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில், 1.37 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்தது. Read More

Read more