#Gas

FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் குறையும் எரிவாயு விலை….. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் மீண்டும் குறைக்கப்படவுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம் 04 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சடுதியாக குறைவடையவுள்ள எரிவாயு விலை….. வெளியாகிய அறிவிப்பு!!

12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபா அளவில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (04) நள்ளிரவு முதல் குறித்த விலை திருத்தம் நடைமுறைப்படுத்தபடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 3,638 ரூபா என்பது குறிப்பிடத்தக்ககது. மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிவாயு கொள்கலனின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது!!

எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4910 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(11/07/2022) முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கையிருப்பு தீர்ந்தமையால் லிட்ரோ நிறுவனம் நீண்ட நாட்களாக தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது. இந்நிலையில், 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று(10/07/2022) நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பல் நேற்று Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

6,850/= ரூபாவை தொட்டது சமையல் எரிவாயுவின் விலை!!

லாஃப்(Laugafs) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3500 மெட்ரிக் தொன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது. இந்நிலையில், குறித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் நிறுவனம் அறிவித்துள்ளது. லாஃப்(Laugafs) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கடந்த இரண்டு மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்பது Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

லாஃப்ஸ்(laugfs) எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ்(laugfs) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அதேவேளை, லாஃப்ஸ்(laugfs) எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2,500 மெட்ரிக் தொன்கள் எரிவாயுவுடன் கூடிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கும் நிலையில் எரிபொருள் விலை !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலைவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை 124 டொலர்களை தாண்டியது. கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், உலக சந்தையின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என துறைக்குப் பொறுப்பான அமைச்சு அறிவித்துள்ளதால் இந்த மாதம் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

3500 mt எரிவாயு தாங்கி நாட்டுக்கு வந்த கப்பல், எரிபொருள் இன்றி நடுக்கடலில்!!

இலங்கைக்கு வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்ல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்தது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலுக்கு தேவையான எரிபொருளை இலங்கையில் வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது 3,500 mt எரிவாயு தாங்கிய கப்பலொன்று!!

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது. இதனால் இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் 394 விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே விநியோகம்….. Litro நிறுவனம் (முழுமையான விபரங்கள்)!!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்றைய தினத்தில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் விதம் மற்றும் பிரதேசங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்று 394 விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். “Litro Gas Lanka Limited Distribution Plan” ஐ பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று இலங்கையை வந்தடையவுள்ளது எரிவாயு கப்பல்!!

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று(17/05/2022) நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஓமானிலிருந்து இந்த எரிவாயு தொகை நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

Read More