655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை “எரிபொருள் விநியோகம் நடைபெறாது”!!

இலங்கைக்கு இதுவரை எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை எரிபொருள் விநியோகம் நடைபெறாது என அந்த விநியோகஸ்தர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தில் 300 மில்லியன் டொலர்களை போட்ரோ சைனா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. இதனைத்தவிர,   மேலும், ஆறு விநியோகஸ்தர்களுக்கு 355 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்த வேண்டியுள்ளது. கடனை செலுத்தும் Read More

Read more

இன்று நண்பகலுடன் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்….. தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்!!

இன்று(26/06/2022) நண்பகல் 12 மணியுடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய தினம் எரிபொருள் போக்குவரத்து இருக்காது எனவும், அதன்படி, திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர வேறு பௌசர்களும் செல்லாது என சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். இதேவேளை, திட்டமிடப்பட்ட எரிபொருள் தாங்கி Read More

Read more

13,200 லீற்றர் எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி தடம்புரண்டது!!

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விபத்து ஏற்படும் போது தாங்கியில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் குருநாகல் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினரின் பெரும் Read More

Read more

சுன்னாகத்தில் எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி, சாரதி மற்றும் உதவியாளர் மீதும் கொடூர தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more