அடுத்த சில வாரங்களில் ஏழு எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன….. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!
ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
“40 ஆயிரம் மொற்றி தொன் டீசல் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் வரும்.
கழிவு எண்ணெயை ஏற்றிய கப்பல் 10 ஆம் திகதிக்கும் 11 ஆம் திகதிக்கும் இடையில் வரும்.
மற்றுமொரு டீசல் கப்பல் 19 ஆம் திகதி வருகிறது.
13 ஆம் 15 ஆம் திகதிகளுக்கு இடையில்
பெட்ரோல் கப்பல் ஒன்று வருகிறது.
15 ஆம் திகதி கச்சாய் எண்ணெய் கப்பல் வருகிறது.
அதே தினத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் டீசல் கப்பல் ஒன்றும் வருகிறது.
22 ஆம் திகதியும் எரிபொருள் கப்பல் வருகிறது.
எரிபொருள் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை செய்து விடுவார்கள் என்று தற்போது எதிர்க்கட்சியினர் குழம்பி போயுள்ளனர்.
இதனை செய்தால் அவர்களில் கதை முடிந்து விடும் என்பதே இதற்கு காரணம்.
நாங்கள் எப்படியாவது இதனை செய்து முடிப்போம்”, எனத் தெரிவித்தார்.