திடீரென உள்வாங்கப்பட்ட கடல் நீர்….. சுனாமி அச்சத்தில் மன்னார் மீனவர்கள்!!

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இன்று(22/05/2024) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன என நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பிரபல தென்னிலங்கை Read More

Read more

கடல் பகுதியில் மணல்களை அகழ பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்த கப்பல்…. மன்னாரில் கரைதட்டி ஒதுங்கியது!!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் பாரிய கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை(07/07/20223) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை இலங்கை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். குறித்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்றது கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கப்பல் தரை தட்டியிருக்கலாம் என ஒரு புறம் சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வாறு Read More

Read more

மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் (புகைப்படங்கள்)!!

மட்டக்களப்பு கதிரவெளியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். நேற்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதுடைய ஜீவானந்தம் நிமால்ராஜ், 23 வயதுடைய புலேந்திரன் அனுஜன்மற்றும் 25 வயதுடைய தங்கவேல் தகிசன் போன்ற இளைஞர்களே இவ்வாறு கடலில் மூழ்கி மரணமடைந்திருந்தார்கள். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவர்கள் மூவர்….. இருவர் மாயம் ஒருவர் தீவிர சிகிச்சையில்!!

3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரின் நிலை தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுமார் 17 முதல் 18 வயது வரை மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது Read More

Read more

கடலில் இளுத்து செல்லப்பட்ட 5 இளைஞர்கள்….. இருவர் மரணம், ஒருவரை காணவில்லை!!

நீர்கொழும்பு – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் எஞ்சிய நால்வரும் காப்பாற்றப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அம்பேவல பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Read more

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் அகழ்வுப் முன்னெடுக்கப்பட்டால் மன்னார் மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்படும்…. என்.எம்.ஆலாம்!!

மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் மன்னார் மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்படும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலாம்(N.M.Alam) எச்சரித்துள்ளார். அண்மையில் மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஓமான் அனுமதி கோரிய போதிலும், அதனை தாம் நிராகரித்ததாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்த நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். உலக உணவு தன்னாதிக்க வாரத்தையொட்டி மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் Read More

Read more

நடுக் கடலில் தத்தளித்த சோமாலி மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்!

நடுக் கடலில் தத்தளித்த நான்கு சோமாலிய மீனவர்களை காப்பற்றிய பேருவளை மீனவர்கள் அவர்களில் இருவரை தமது ஆழ்கடல் மீன்பிடி படகின் மூலம் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 25 மற்றும் 30 வயதான சோமாலிய மீனவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 8 ஆம் திகதி பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்ற மீனவர்கள், நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு சோமாலிய மீனவர்களை கண்டுள்ளனர். அந்த மீனவர்களில் தலா இரண்டு Read More

Read more

நாட்டில் இடி – மின்னலுடன் கூடிய மழை!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என Read More

Read more

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை!!

மத்திய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் நாளையும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய Read More

Read more

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – மக்களே அவதானம்!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு Read More

Read more