தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தருக்கு நிகழ்த்த சோகம்!!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நபர் ஒருவர் இன்றைய தினம் (28/08/2023) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்ற 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நாளாந்தம் பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்துதல், அங்கப்பிரதட்சணை எடுத்தல் போன்ற தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்,

இன்றையதினமும்(28/08/2023) பக்த அடியார் ஒருவர் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *