யாழ் வடமராட்சியில் கம்பமொன்றில் மோதி உயிரிழந்தார்….. 22 வயது மன்னார் இளைஞர்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றிரவு (08/08/2023) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் கம்பம் ஒன்றில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்துள்ள குறித்த நபர் மன்னார் முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் Read More

Read more

யாழ் – சங்கானையைச் சேர்ந்த 27, 28 வயது தம்பதிகள்….. கட்டுநாயகாவில் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர். கைதான தம்பதி யாழ்ப்பாணம் – சங்கானைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இளைஞனுக்கு 27 வயது, யுவதிக்கு 28 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக Read More

Read more

தூக்கில் தொங்கி சடலாமானார்….. யாழ் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவி!!

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியான் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். இந்த மாணவி இன்று(03/08/2023) காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும் சக மாணவிகள் நண்பகல் அளவில் Read More

Read more

59 வயதில் உலக சாதனை படைத்த யாழ் தமிழர்!!

7நிமிடம் 48செக்கன்களில் 1550KG எடை கொண்ட ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(09/07/2023) பிற்பகல் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி Read More

Read more

தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய 19 வயது மாணவி….. யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், கோபமடைந்த குறித்த பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன் கிழமை(12/07/2023) அன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16/07/2023) சிகிச்சை Read More

Read more

ஊர்காவல்துறையில் 9 வயது மாணவிக்கு அதிபரால் நடந்த கொடுமை….. அதிபர் கைது – மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ் – தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஊர்காவல்துறை காவல்துறையினர் நேற்று(16/07/2023) ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபரை இன்று(17/07/2023) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக Read More

Read more

மீண்டும் ஆரம்பமானது….. கொழும்பு – யாழ் .புகையிரத சேவை!!

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை இன்று(15/07/2023) மீள செயற்பட ஆரம்பித்துள்ளது. அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணத்துக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது. மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி Read More

Read more

இன்று காலை பரீட்சார்த்தமாக பயணித்தது யாழ்தேவி….. வார இறுதியிலிருந்து சேவையில்!!

யாழ்தேவி புகையிரதம் அனுராதபுரம் புகையிரதம் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09/07/2023) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இதன்போது, அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் வவுனியா – ஓமந்தை வரையான Read More

Read more

சமகால அரசியல் சூழ்நிலைகளை உள்ளடக்கி கலந்துரையாடல்களுக்கு திட்டம்!!

சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாண கலந்துரையாடல் 08/07/2023 அன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 14.00 மணி வரை கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ARR வணிக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாண கலந்துரையாடல் 09/07/2023 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டகளப்பில் உள்ள east lagoon விடுதியில் இடம்பெறவுள்ளது. Read More

Read more

யாழில் இருந்து கதிர்காமம் நோக்கிய பயணம்….. குடைசாய்ந்த பேருந்து – ஆபத்தான நிலையில் 08 பேர்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று(02/07/2023) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் இளைஞர் ஒருவரின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாரதியின் கவனக்குறைவு காரணமாக திருகோணமலை மொரவ பகுதியில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன்(வயது 33) என Read More

Read more