விமான நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்!!

ஜெர்மனின் ஹம்பர்க்(Hamburg) நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவரால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. காரில் வந்த குறித்த இனம்தெரியாத நபர் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். தனது கையில் ஒரு துப்பாக்கியுடன் வந்திருந்த இவர் வானை நோக்கி 2 முறை சுட்டதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தினை நோக்கி ஓடியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. அதன்பின், இந்தியாவின் சென்னை Read More

Read more

22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More

Read more

யாழ் – சங்கானையைச் சேர்ந்த 27, 28 வயது தம்பதிகள்….. கட்டுநாயகாவில் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர். கைதான தம்பதி யாழ்ப்பாணம் – சங்கானைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இளைஞனுக்கு 27 வயது, யுவதிக்கு 28 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக Read More

Read more

கட்டுநாயக்க பகுதியில் ATM இல் எடுத்த பணத்தை பறிக்க முற்பட்ட வேளை…. தர மறுத்தவர் கத்தியால் குத்தி கொலை!!

நெருக்கடி நிலை காரணமாக பலர் வேலை வாய்ப்பினை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் மோசடி நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணபரிமாற்ற சேவைகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணத்தினை பெறுவதற்காக வரிசைகள் காத்திருக்கும் போது பின்னால் வரிசைகளில் காத்திருப்பது போன்று சில மோசடி கும்பல்கள் பின்தொடர்ந்து அச்சுறுத்தி பணத்தினை களவாடி செல்லும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

ரஷ்யாவின் “ஏரோஃப்ளோட்” விமான பிரச்சினை….. இலங்கை மீது கடும் அதிருப்தியில் ரஷ்யா – மன்னிப்பு கோரும் அரசியல் பிரபலங்கள்!!

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (07/06/2022) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார். அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க Read More

Read more

31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்!!

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் Read More

Read more

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இனி புதிய நடைமுறைகள்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தால் வெளியேறும் பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் நுழைவாயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக மேம்படுத்தல் திட்டங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது. அதன்கீழ் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் “ஒரு அடையாள அட்டை” (One ID) எனும் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முதலாவது முனையத்தின் Read More

Read more

ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி-அதிகரிக்கவுள்ள விமான பயண கட்டணம்

உலகில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் விமான பயண கட்டணம் கணிசமாக உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 119 டொலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களுக்கான எரிபொருள் விலை 57% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர் எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள சுமையை சமாளிக்க விமான பயண கட்டணத்தை உயர்த்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக Read More

Read more

நாட்டில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ள இன்னொரு விமான நிலையம்!!

இரத்மலானை விமான நிலையம் இம்மாதம் 29ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க(DV Chanaka)தெரிவித்துள்ளார். இந்த விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்குவதற்கு இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். தென்னிந்தியா மற்றும் மாலைதீவு போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்றார். இரத்மலானை விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் பல சர்வதேச Read More

Read more