முரண்பாட்டால் கணவன் கொலை….. மனைவி உட்பட 11 பேர் கைது!!
யாழ் கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச் சாட்டில் அவரது மனைவி உட்பட 11 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
(21/01/2023) இரவு சனிக்கிழமை அன்று மோட்டார்சைக்கிள் திருத்தும் கடை ஒன்றினை நடாத்தி வந்த 30 வயதினை உடைய அஜித் என்பவரே கொலை செய்யப்பட்டார்.
மேலும்,
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்களுக்கு இடையில் ஏற்ப்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என தெரிய வருகின்றது
அந்நிலையில் குறித்த நபரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் இறந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை உட்ப்பட 11பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
>