22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501

என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார்.

எனினும்,

இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *