திடீர் சுகவீனதிதால் மரணமடைந்த யாழ் பல்கலை மாணவி….. கண்ணீர் மல்க இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்த உறவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, சாயுடை  பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம்(25/12/2023) அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர், நண்பிகள் , ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் Read More

Read more

யாழ் பல்கலைக்கழக மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் தாக்குதல்….. மடக்கிப் பிடித்த மாணவர்கள்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை பல்கலை மாணவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலை வளாகத்திற்குள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. குறித்த நினைவேந்தல் நிகழ்விற்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி நினைவேந்தலில் பங்குகொண்டனர். நிகழ்வு முடிவுற்ற பின்னர் அங்கு நின்ற மாணவிகள் மீது வெளியிலிருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர்.   பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய Read More

Read more

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்தரீதியாக பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்த்தியதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.

Read more

யாழ் பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக பெரும் போராட்டம்!!

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சிக்குண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பெருமெடுப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மையின மாணவர் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது குறித்த மாணவர்களின் போராட்டமானது பரமேஸ்வர வீதி ஊடாக பலாலி வீதியில் சென்றடைந்து தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான சூழ்நிலையினை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெரும்பான்மையின Read More

Read more

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவி என என கூறப்பட்ட போலி அடையாள அடடையுடன் யுவதி ஒருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி என தெரிவித்த போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த Read More

Read more

யாழ் பல்கலையின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு, எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்….. 2619 பேருக்கு பட்டங்கள்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.   முதல் இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர்.   இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று யாழ். பல்கலைக்கழக சபா Read More

Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் வாயில்களை மறித்து போராட்டத்தில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயில்களை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமக்கான மாணவர் ஒன்றியத்தை உடனடியாக அங்கீகரிக்க கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டத்தில் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை 8 மணி முதல் மாணவர்கள் இந்த மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Read more

பெண் மாணவிகள் மோதல் – ஒருத்தி வைத்தியசாலையில்….. யாழ் பல்கலைக்கழகத்தில் சம்பவம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read more

யாழ் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் மரணம் (புகைப்படங்கள்)!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக்கற்கை துறையில் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மொனராகலை – மரக்கலையை சேர்ந்த நவரட்ணம் தில்காந்தி (வயது -26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். ஊவா மாகாணத்தின் பின்தங்கிய Read More

Read more

அனைத்து பல்கலைக்களகங்களின் மீள் ஆரம்பம் தொடர்பாக வெளியான தகவல்!!

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அந்த ஆணைக்குழு அந்த தெரிவித்துள்ளது. சகல மாணவர்களையும் உடனடியாக அழைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. எவ்வாறாயினும் ஒரு சந்தர்ப்பத்தில் 50 சதவீத மாணவர் எண்ணிக்கையுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunga) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் Read More

Read more