#accidents

FEATUREDLatestNewsTOP STORIES

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து….. ஆபத்தான நிலையில் 36 மாணவர்கள்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29/02/2024) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று(29/02/2024) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், குறித்த விபத்தில் காயமடைந்த 36 பாடசாலை மாணவர்களும் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மதுபோதையில் தள்ளாடிய அம்புலன்ஸ் வண்டி….. மூன்று முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்து – மூவர் படுகாயம்!!

மதுபோதையில் நோயாளிகாவு வண்டியை(Ambulance) செலுத்தியதன் காரணமாக ஹட்டன் அளுத்கம பகுதியில் முச்சக்கரவண்டிகளுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த நோயாளிகாவு வண்டியானது டிக்கோயா பகுதியில் இருந்து ஹட்டன் நகரை நோக்கிச்சென்றது.   அவ்வேளை, இரண்டு முச்சக்கர வண்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிவிட்டு, பின்னர் அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மண்டான் – குஞ்சர்கடை வீதியில் மோ.சைக்கிள் விபத்து….. ஒருவர் மரணம் – ஆபத்தான நிலையில் 17 வயது மாணவன்!!

வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சற்று முன்னர் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மண்டான், கரணவாய் மேற்கு, பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. மேலு‌ம், இவருடன் பயணித்த சிவகுமார் கலையொளி (வயது 17)  என்பவருக்கும் ஒரு கால் முடிவடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சுமார் 20 வாகனங்கள் மோதி பாரிய விபத்து!!

பம்பலப்பிட்டி வஜிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சுமார் 20 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி வீதியில் இருந்து வஜிர வீதியின் ஊடாக டூப்ளிகேஷன் வீதியில் பயணித்த கார் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விசாகா வித்தியாலயத்தை நோக்கி சென்றுள்ளது. வீதியின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பலவற்றுடன் மோதி முன்னோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். க.பொ.த சாதாரண Read More

Read More
LatestNewsTOP STORIES

அரச பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்….. ஒருவர் பலி!!

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, கிளிநொச்சி இயக்கச்சி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். Read More

Read More
LatestNewsTOP STORIES

அச்சுவேலி வல்லை சந்தியில் இரு கார்கள் மோதி விபத்து!!

அச்சுவேலி வல்லை சந்தியில் சற்று முன்னர் இரு கார்கள் விபத்திற்குள்ளாகியுள்ளது.   இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் வல்லைப் பகுதியில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பும் சந்திக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு பின்னால் வந்த கார் மோதுண்டே விபத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது. வல்லை வீதியில் முன்னால் சென்ற கார் சாரதிக்கு தொலைபேசி அழைப்பு வர அவர் தனது காரை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு தொலைபேசியில் கதைத்த போது பின்புறமாக வந்த கார் நிறுத்தி வைக்கப்பட்ட Read More

Read More
LatestNewsTOP STORIES

பெண் ஒருவரின் மோட்டார்சைக்கிளில் மோதிய முதியவர் தலை மீது ஏறியது பிறிதொரு வாகனம் ஏறி விட்டு தப்பியோட்டம்….. சம்பவ இடத்திலேயே முதியவர் பலி!!

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும் தெரியவருகையில், வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.   வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் Read More

Read More
LatestNews

கல்லடி பகுதியில் பாலத்திற்குள் பாய்ந்த லொறி!!

புத்தளம் கல்லடி பகுதியில் லொறியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை  அதிகாலை பாலம் ஒன்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் என புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து சென்ற 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேர் இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். இதன்போது, குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதி மற்றும் ஒருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் Read More

Read More
LatestNews

அரச நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான பஜிரோவை அடித்து தூக்கிய தனியார் பஸ்….. வேம்படிச்சந்தியில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் தனியார் பேருந்தும் அரச திணைக்களம் ஒன்றிற்குச் சொந்தமான பஜிரோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்.மடம் வீதியூடாக வந்து கொண்ருந்த விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான பஜிரோ வேகமாக திருப்புவதற்கு முயற்சித்த போது கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது. இருப்பினும் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. எனினும், விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான Read More

Read More
LatestNews

செட்டிகுளம் பகுதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து….. 15 வயது சிறுவன் மரணம்!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பகுதியில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் மரணமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, மதவாச்சி – மன்னார் பிராதான வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயது சிறுவன் மரணமடைந்துள்ளார். விபத்தில் Read More

Read More