பழங்குடியின 11 வயது மாணாவியை நாசம் செய்த…. அதிபர் மற்றும் ஆசிரியர்!!
இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது மாணவி 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களா சிறுமிக்கு அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.
அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை சோதனை செய்த வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக கூறினர்.
இதனால்,
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர்.
இந்நிலையில்,
அந்த மாணவி பெற்றோரிடம் நடந்த உண்மையை கூறினார்.
அதில் அவர் தனது பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இதனை யாரிடமும் சொல்லமுடியாமல் அந்த மாணவி மறைத்து வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குண்டேய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.