#newstamil

FEATUREDLatestNews

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த பல பில்லியன் வருமானம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியுடன், வாகன இறக்குமதியிலிருந்து மட்டும் இதுவரை 163 பில்லியன் ரூபா சுங்க வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) தெரிவித்துள்ளது. கொழும்பில் (Colombo)  நடைபெற்ற ஊடக சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட (Seevali Arukgoda) இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டில் நாங்கள் பெற்ற வருமான இலக்கு 2,115 பில்லியன் ரூபா. கடந்த Read More

Read More
FEATUREDLatestNews

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மற்றும் கண்டி Read More

Read More
FEATUREDLatestNews

புதிய உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் சிக்கல்!

உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல அரசியல் கட்சிகளில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளினால் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாமதத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கும் உறுப்பினர்களின் பெயர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்புமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இந்தப் பெயர்கள் Read More

Read More
FEATUREDLatestNews

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E O/L Exam) தோற்றிய மாணவர்களுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கான திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம்  அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 171,100 Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கைக்கான பேருந்து இறக்குமதி குறித்து வெளியான தகவல்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா? Read More

Read More
FEATUREDLatestNews

அதிகரிக்கும் விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பேருந்து சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பேருந்துகளை ஆய்வு செய்வதற்காக இரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்தி , பேருந்துகளை ஆய்வு செய்யவும் திட்டங்கள் Read More

Read More
FEATUREDLatestNews

தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு (Elections Commission – Sri Lanka) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், ஊழியருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் Read More

Read More
FEATUREDLatestNews

“மோடியிடம் சொல்..” பெண்ணின் கண்முன்னே கணவரைக் கொன்று பயங்கரவாதிகள் சொல்லி அனுப்பிய செய்தி

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற தொழிலதிபரையும் பயங்கரவாதிகள் Read More

Read More
FEATUREDLatestSports

IPL வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து கே.எல். ராகுல் சாதனை

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் Read More

Read More
FEATUREDLatestSports

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான் ஆரம்ப கட்டத்தில் பேட்டிங் செய்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டுபிடித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பியது. இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு நல்ல முடிவை கொடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய Read More

Read More