நாட்டை நோக்கி விரையும் சர்வதேச கப்பல்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் டிசம்பர் மாதம் இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை Read More

Read more

அவ்வப்போது ஓரளவு பலத்த மழை!!

இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமையால் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை  என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, Read More

Read more

சொகுசு வாகன தடைகளிற்கு மத்தியில் கொண்டுவரப்பட்டது 6.5 கோடி பெறுமதியான சொகுசு வாகனம்!!

இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது. இந்த காரின் மதிப்பு இலங்கையில் சுமார் ஆறரைக்கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி ஒருவர், அமெரிக்கத் தூதரகத்தால் இந்த கார் வரியின்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடைநிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார். அந்த கார் வேறொருவரால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் அந்த அதிகாரி Read More

Read more

நாட்டில் இடி – மின்னலுடன் கூடிய மழை!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என Read More

Read more

அபாய பகுதிக்குள் கொண்டுவரப்பட்ட மாவட்டங்கள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 4,509 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும், கம்பாஹா மாவட்டத்தில் 1,905 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள சுகாதார பிரிவுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையின் கீழ் சிறப்புக் குழுக்கள் நிறத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read more

கடும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு சாத்தியம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் Read More

Read more