#Negambo

LatestNewsTOP STORIES

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு….. மூவர் படுகாயம்!!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனத்தை Read More

Read More
LatestNews

கடலில் இளுத்து செல்லப்பட்ட 5 இளைஞர்கள்….. இருவர் மரணம், ஒருவரை காணவில்லை!!

நீர்கொழும்பு – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் எஞ்சிய நால்வரும் காப்பாற்றப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அம்பேவல பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Read More