வெள்ளவத்தை கடற்கரையில் தலையின்றி சடலம் கரையொதுக்கம்!!

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

சாந்திரபுர கடற்கரையில் கைப்பற்றப்பட்டது 1000KG வெடிபொருட்கள்!!

மன்னாரில் 1000 கிலோ சட்ட விரோதமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  மன்னார் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 மற்றும் 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மன்னாரில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவர்களிடம் இருந்து 998.750 கிலோ எடையுள்ள 7,990 வாட்டர் ஜெல் Read More

Read more

நாட்டில் இடி – மின்னலுடன் கூடிய மழை!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என Read More

Read more