#Inversticaion

FEATUREDLatestNewsTOP STORIES

சிறுமி “பாத்திமா ஆயிஷா”வின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது….. குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி!!

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினருமாவார்.   இதேவேளை, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.   9 வயது சிறுமி ‘ஆயிஷா’ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் கைது….. Read More

Read More
LatestNewsTOP STORIES

பட்டப்பகலில் யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!!

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் அண்மையில் சுன்னாகம் மற்றும் இளவாலை காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகருக்கு கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் புத்தூரைச் சேர்ந்த மூவர் Read More

Read More
LatestNews

கடலில் இளுத்து செல்லப்பட்ட 5 இளைஞர்கள்….. இருவர் மரணம், ஒருவரை காணவில்லை!!

நீர்கொழும்பு – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் எஞ்சிய நால்வரும் காப்பாற்றப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அம்பேவல பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Read More
LatestNews

மட்டக்க்ளப்பில் பூசாரி வேடத்தில் வீடுகளிற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட 31 வயது பெண் கைது!!

மட்டக்களப்பு பகுதியில்  பூசாரி வேடத்தில் வந்த பெண் ஒருவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் Read More

Read More
LatestNews

வீடொன்றின் மதில் சுவரை இடுத்து உள்ளே சென்ற கார்….. ஆபத்தான நிலையில் இருவர்!!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  இன்று காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளவிற்குள் புகுந்ததில்  விபத்திற்குள்ளாகிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் Read More

Read More
LatestNews

16 வருடங்களின் பின்னர் திருடன் கைது…… வடமரட்சியில் சம்பவம்!!

16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி  கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா வித்தியாலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு இரவு நேர காவலாளியை கட்டிவைத்து சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைவிரல் அடையாளங்களை பரிசோதித்து வைத்திருந்த பொலீஸார் நேற்று வல்லை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நபர் நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
LatestNews

பளை பொலிஸ் பிரிவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரந்தாய் பளையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 12 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

Read More
LatestNews

அடுத்து சிக்கிய 250 கிலோ கிராம் ஹெரோயின்!!

பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பணியகத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை அதிரடி சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போதே,  குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More