யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவி என என கூறப்பட்ட போலி அடையாள அடடையுடன் யுவதி ஒருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி என தெரிவித்த போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி என கூறி திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து அது தொடர்பில் கோப்பாய் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவலின் பிரகாரம் குறித்த Read More

Read more

நீர்வேலியில் தனியார் பேருந்தை வழிமறித்து சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு ம‌ர்ம கு‌ம்ப‌ல் தப்பியோட்டம்!!

நீர்வேலியில், பேருந்து சாரதி ஒருவரின் மூக்கை நபர் ஒருவர் வெட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நேற்று தனியார் பேருந்தை வழிமறித்த நபரொருவரே சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.   அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை Read More

Read more

பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!!

யாழ்ப்பாணத்தில், தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் எனத் தெரிவித்து சிறுமியொருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இது தொடர்பில் சிறுமி காவல் நிலையத்தில் தெரிவித்திருப்பதாவது, யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மது போதையில் வந்து Read More

Read more

முடமாவடி சந்தியில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கந்தர்மடம் – பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது – 67) என்ற 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

கோப்பாய் சந்தியில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான இளம் குடும்பப்பெண்!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் சென்று மோட்டார் சைக்கிள் கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.   மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் Read More

Read more

கோப்பாயில் தாக்குதலில் 7 பேர் காயம்; விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமனம்!!

யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் 7 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 05 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 14 பேரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தங்கியிருந்த கட்டடம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Read More

Read more

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

Read more