கடந்த வருடம் நாட்டில் வீதி விபத்துக்களில் சிக்கி இறந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!!

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர வீதி விபத்துக்களில் சிக்கி 2470 பேர் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர். இந்த தகவலை சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரும், சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண(Ajith Rohana) தெரிவித்தார். கடந்த வருடத்தில் மாத்திரம் 22000 வாகன விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், நாளொன்றிற்கு சுமார் 60 வாகன Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க மருத்துவ சான்றிதழ் பெற வந்தவர்களில் கண்டுபிடிக்கப்படட அதிர்ச்சியான உண்மைகள்!!

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன(Ajith Rohana)  தெரிவித்தார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் Read More

Read more

பொது மக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை!!

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது இடங்கள், கடைகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவற்றில் முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்ய சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் செறிந்திருக்கும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் Read More

Read more

கோப்பாயில் தாக்குதலில் 7 பேர் காயம்; விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமனம்!!

யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் 7 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 05 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 14 பேரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தங்கியிருந்த கட்டடம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Read More

Read more

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும் மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதியா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்!!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். பயணத்தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும்வரை வெளியில் வரமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

ஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்!!

மேல் மாகாணத்தில் 700 அவசர சாலைத் தடைகளை நிறுவுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதற்காக சுமார் 8,000 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Read more

இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய செய்தி!!

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை பிரதேச செயலாளர் அலுவலகங்களின் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். சில வர்த்தக நிலையங்களை Read More

Read more

ஜூன் 14 பின்னரும் பயணத்தடையா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!!

பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டில கொரோனா மேலும் பரவலடைய வாய்ப்புக்கள் உள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு பரவலடைந்தால் பயணத்தடை மேலும் நீடிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – அஜித் ரோஹண தகவல்!!

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read more