முள்ளிவாய்க்கால் பேரவலம் இனவழிப்பின் ஓர் அங்கம்: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய மனிதப் பேரவலம் தமிழனத்தின் மீதான இனவழிப்பின் ஆரம்பமோ, முடிவோ அல்ல, நீண்ட தொடரான இனவழிப்பின் ஒரு அங்கம் மாத்திரமே என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. தொடர் இனவழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும் என அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்ய, சர்வதேசத்தினால் கண்காணிக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய Read More

Read more

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

Read more

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகமான துயரத்தை நினைவுகூரும் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.   முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அனுஷ்டிப்பு வாரத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இணை Read More

Read more