முடமாவடி சந்தியில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கந்தர்மடம் – பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது – 67) என்ற 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *