கோப்பாயில் தாக்குதலில் 7 பேர் காயம்; விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமனம்!!
யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைக்கு மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலில் 7 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
05 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 14 பேரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தங்கியிருந்த கட்டடம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.