LatestNewsTOP STORIES

பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!!

யாழ்ப்பாணத்தில், தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் எனத் தெரிவித்து சிறுமியொருவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர் பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இது தொடர்பில் சிறுமி காவல் நிலையத்தில் தெரிவித்திருப்பதாவது,

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமியின் தந்தை மது போதையில் வந்து தாயாருடன் தினம்தோறும் சண்டை பிடிப்பதாகவும்,

இதனால் தன்னுடனும் ஒவ்வொரு நாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்து  இன்றைய தினம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய சிறுமி நீண்ட நாட்களாக தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாது இன்றைய தினம் தஞ்சம் அடைந்ததாக குறிப்பிட்டார்.

தஞ்சமடைந்த சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் அச்சுவேலி காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் காவல்துறையினரிடம் முறைப்பாட்டின் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *