நாளை(03/07/2022) முதல் தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக முடக்கம்!!

நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாலைகளில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு Read More

Read more

ஆறு வாரங்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்….. வலுசக்தி அமைச்சர்!!

95 ஒக்டென் பெட்ரோல் நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள 95 ஒக்டென் பெட்ரோல் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெட்ரோல் கையிருப்பில் இருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 ஒக்டென் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் Read More

Read more

எரிபொருள் விநியோக இடைநிறுத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பிலான அறிவிப்பொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எரிசக்தி அமைச்சில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொள்கை ரீதியில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் தாங்கிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன Read More

Read more

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!!

இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த எரிபொருள் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபர் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இனம் கண்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார்.  

Read more

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது!!

இன்று (15/05/2022) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். வெசாக் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டது. அத்துடன், தற்போது ஹம்பாந்தோட்டையில் எரிபொருளை கோரி சில குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read more