எரிபொருளின் புதிய விலை இன்று பிற்பகல் அறிவிக்கப்படலாம்!!

எரிபொருள் விலை இன்று(15/08/2022) குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஒரு மாதத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார். குறித்த அறிவிப்பின் படி, இந்த மாதம் 01 ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், எரிபொருள் விலையில் Read More

Read more

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் பாரியளவில் வீழ்ச்சி….. இலங்கையில் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 120 ரூபாரூபாவிற்கு வழங்க முடியும்!!

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்களின் ஐக்கிய ஒன்றியத்தின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை அதிகளவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் முன்வைத்துள்ள விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டுமெனவும் இதனால் எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.   உலக சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை, நாளொன்றுக்கு Read More

Read more

வரலாற்றில் முதல் தடவை உச்சம் தொட்ட பேருந்து கட்டணம்!!

முதல் தடவையாக இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணம் 4450.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. குறித்த கட்டண உயர்விற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான கட்டண அதிகரிப்பு இடம் பெறவில்லை எனவும், இதன் காரணமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை Read More

Read more

விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம்!!

விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. எனினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும்….. Lanka IOC தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்!!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘ஆனந்த பாலித’ தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை Read More

Read more

நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு….. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!!

பெற்றோல் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், மீண்டும் பெற்றோல் கப்பல் கொள்வனவு செய்யப்படும் வரை போதியளவு பெற்றோல் கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் பல நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள பெற்றோல் கப்பலை விடுவிக்க முடியாமல் போனதே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுகின்ற Read More

Read more

விலையேற்றத்துடன் தளர்த்தப்பட்டன எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும்!!

எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது Read More

Read more