விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம்!!
விலை சூத்திரத்துக்கு அமைய,
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.
எனினும்,
விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.