#Lubricating oil

FEATUREDLatestNewsTOP STORIES

விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம்!!

விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. எனினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய தொழிற்சங்க ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இதன்படி மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, கடந்த மே மாதம் 24 ஆம் திகதி முதல் தடவையாக விலையில் திருத்தம் செய்யப்பட்டது. 27ஆயிரம் Read More

Read More
LatestNewsTOP STORIES

இன்றைய தினம் மின்சாரம் தடைப்படுமா என்பது தொடர்பில் CEB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனியவள கூட்டுத்தாபனம் உராய்வு எண்ணெய்யை வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனம் 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை இன்று வழங்கவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மின்சார விநியோகத்தடை ஏற்படுமா என்பதை, மாலை வேளையில் அறியப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். Read More

Read More
LatestNews

கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு – அரசாங்கம் தீவிர முயற்சி!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிடமிருந்து மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலியப் பொருட்களை நீண்ட கால கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. குறித்த நாடுகளின் ஸ்ரீலங்காவிற்கான இராஜதந்திரிகளை சந்தித்து, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இது குறித்து பேச்சு நடத்தியுள்ளார். ஸ்ரீலங்காவில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் பதில் தலைவர் சயீப் அலனோபியை எரிசக்தி அமைச்சில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாடு Read More

Read More