இன்று சனிக்கிழமை எரிபொருளை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்….. முழுமையான விபரம் வெளியீடு!!

எரிபொருள் விநியோகம் வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை (30/07) எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் உந்துருளிக்கு 4 லீட்டர், முச்சக்கர வண்டிக்கு 5 லீட்டர் , ஏனைய வாகனங்களுக்கு 20 லீட்டருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3-4-5 ஆக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6-7-8-9 ஆகவும் இருந்தால் Read More

Read more

எரிபொருள் பிரச்சினைக்காக ஜனாதிபதி  கோட்டாபய உரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள விசேட பணிப்புரை!!

கையிருப்பில் உள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்குமாறு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.   அத்துடன், நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் Read More

Read more

ஆறு வாரங்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்….. வலுசக்தி அமைச்சர்!!

95 ஒக்டென் பெட்ரோல் நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள 95 ஒக்டென் பெட்ரோல் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெட்ரோல் கையிருப்பில் இருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 ஒக்டென் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் Read More

Read more

எ‌ரிபொரு‌ள் விநியோகம் மீள ஆரம்பம்!!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நாடளாவிய ரீதியான எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகல் மீண்டும் ஆரம்பமானதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாகவும், அடையாளங்காணப்பட்ட பிரதேசங்களுக்கான எரிபொருள் விநியோகம் தற்போது இடம்பெறுவதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது. பொலிஸ் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. எரிபொருள் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்த இரண்டு Read More

Read more

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்….. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. நேற்றிரவு நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பிலும் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவங்கள் காரணமாக கடந்த திங்கட்கிழமை (09) நாடளாவிய ரீதியில் Read More

Read more