வாகனம் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் வாகனங்கள் வைத்திருப்போருக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, வர்த்தகர்கள் சிலர் வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இதனை தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது நாட்டை பொறுத்த வரையில் அதிகமானோர் கார் அல்லது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி Read More

Read more

விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம்!!

விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. எனினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

விஷத்தன்மையான தேங்காய் எண்ணெய் நிறுவனத்திற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி….. புத்திக டி சில்வா!!

விஷத்தன்மையான இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு சந்தையில் விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபை எவ்வாறு அனுமதியை வழங்கியது என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா (Buddhikad Silva) தெரிவித்துள்ளார். புற்று நோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்படும் நிறுவனம் மீண்டும் அதே வர்த்தக பெயரில் தேங்காய் எண்ணெயை சந்தைக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய Read More

Read more

மன்னாரில் 267 Billion USD பெறுமதியான கனிய வளமும், எரிபொருள் வளமும்….!!!!

மன்னார் மாவட்டத்தில் மறைந்துள்ள கனிய மற்றும் எரிபொருள் வளங்களை சரியான முறையில் முகாமை செய்தால் அதிக இலாபத்தை இலங்கை அடையலாம் எனவும், அவற்றைப் பயன்படுத்தி நாட்டின் மொத்த கடன் சுமையையும் செலுத்திவிடலாம் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனைக்குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 267 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிய வளமும், Read More

Read more

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் இரண்டு பவுசர்கள் மடக்கிப்பிடிப்பு

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படும் இரண்டு பவுசர்களை பொலிசார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் 55,000 லீற்றர் எண்ணெயுடன் இரண்டு பவுசர்களை டன்கொட்டுவ பொலிசார் இன்று தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சதேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பவுசர்களே இவை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய்இதுவரை சந்தைக்கு விடப்படவில்லை என்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று உறுதிப்படுத்தினார். இறக்குமதி Read More

Read more