மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!!
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மூன்று அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை 111.37 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் சுத்திகரிப்பிற்காக பயன்படும் மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.
Read more