நாட்டில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும்!!

இலங்கையில் அடுத்த  ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read more

ஏற்ற இறக்கத்தில் தங்கத்தின் விலை….. மகிழ்ச்சியில் தங்க பிரியர்கள்!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம்(17/08/2023) தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. அதன்படி, இன்றையதினம் (17/08/2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609113 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்றைய தினம்(17/08/2023) 24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை 171900 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 22 கரட் Read More

Read more

விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம்!!

விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. எனினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளது….. புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள்!!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பில் இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை கோதுமை மாவிற்கான Read More

Read more

திகுடுத்தனம் புரிந்த வர்த்தகர்……. நுகர்வோர் அதிகார சபையினரின் அதிரடி நடவாட்க்கை!!

நுவரெலியாவில் கடையொன்றில் விலையை மாற்றி அதிக விலைக்கு சொக்லேட் விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (6) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கடையிலிருந்த சொக்லேட்டின் விலையை வர்த்தகர் அழித்துவிட்டு தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப பேனாவால் எழுதி வைத்து விற்பனை செய்வதாக நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. நுவரெலியா நுகர்வோர் அலுவல்கள் அத்தியட்சகர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ரங்க Read More

Read more

அரிசி விலையில் வீழ்ச்சி…. நாடு மகிழ்ச்சியில்!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரிசியின் மொத்த விலை கிலோ ஒன்று ரூ.120 ஆகவும், நாட்டு அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.110 ஆகவும், வெள்ளை பச்சை அரிசியின் மொத்த விலை கிலோ ரூ.98 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாட்டு அரிசி மெட்ரிக் தொன் ஒன்றின் விலை 400 டொலராகவும், வெள்ளை பச்சை மெட்ரிக் தொன் Read More

Read more

திடீரென அதிகரித்தது முட்டையின் விலை!!

இலங்கையில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான உணவு  தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

450 கிராம் நிறை கொண்ட பாணின் விலை இன்று முதல் ரூ .5 ஆல் உயர்வு!!

450 கிராம் நிறை கொண்ட பாணின் விலை இன்று (12 ம் திகதி) முதல் ரூ .5 ஆல் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே. ஜெயவர்த்தன தெரிவித்தார். அத்துடன் அனைத்து தின்பண்டங்களும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று (11 ம் திகதி) முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை10 ரூபாவால் உயர்த்தப்பட்டதை அடுத்து சங்க உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பேக்கரி தொழில் இன்று Read More

Read more

2840 மற்றும் 2750 ரூபாவிற்கு அதிகரித்த 12.5KG(லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ காஸ்) சமையல் எரிவாயு!!

நள்ளிரவு முதல் 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா .1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய விலை ரூ .2,750 ஆக இருக்கும். 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ .503 ஆல் அதிகரித்து ரூ .1,101 ஆக உயர்ந்துள்ளது. 2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலை 520 ரூபாய் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு Read More

Read more

அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajabaksha) தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையே நேற்று நீக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அவற்றுக்கான புதிய விலைகள் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read more