மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய தொழிற்சங்க ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இதன்படி மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, கடந்த மே மாதம் 24 ஆம் திகதி முதல் தடவையாக விலையில் திருத்தம் செய்யப்பட்டது. 27ஆயிரம் Read More

Read more

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மூன்று அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை 111.37 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் சுத்திகரிப்பிற்காக பயன்படும் மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

Read more

உலக சந்தையில் வரலாற்றில் என்றுமில்லாத அளவு உயர்ந்தது எரிபொருளின் விலை….. உதய கம்மன்பில!!

உலக சந்தையில் எரிபொருளின் விலை வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 192 ரூபாய் வரையும் டீசலின் விலையை 169 ரூபாய் வரையும் கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பை கோரியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை Read More

Read more

திடீர் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தங்க விலை!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

Read more

தங்க பிரியர்களுக்காக சோகமான செய்தி!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக இலங்கையிலும் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 24 கரட் தங்கத்தின் விலை 10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு  பிரதான தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்னர் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 106,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 118,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக செட்டியார் தெரு பிரதான தங்க Read More

Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது. அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின் உற்பத்தித்திறன் அதிகரித்ததன் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் லேசான அதிகரிப்பு காணப்பட்டது. எனினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை1,800 அமெரிக்க டொலருக்கும் மேலாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு Read More

Read more

தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட அதிகரிப்பு

உலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,745 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 0.72 வீதத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, நேற்று முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,845 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த காலப் பகுதியில் தங்கத்தின் விலை அதிகரிக்க Read More

Read more